சமூக வலைதளங்கள் மற்றும் இணையம் – வரமா ? சாபமா ?

இணையதள நண்பர்களுக்கு வணக்கம்.

ஊடகங்களில் இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களால் ஏற்பட்ட இரு விபரீத சம்பவங்களை கண்டேன். இணையத்தை தளமாக கொண்டு ஒவ்வொரு மனிதனின் திறன் மற்றும் வாழ்வை மேம்படுத்தும் குறிக்கோளை கொண்டதே F – infotech நிறுவனம். கடந்த வாரம் whatsapp – இல் பரப்பப்பட்ட ஒரு வதந்தி காணொளி “குழந்தை திருடர்கள்” காரணமாக மக்கள் அச்சத்தில் இருவேறு இடங்களில் சிலரை தவறாக எண்ணி தாக்கியதில் பலர் காயம் அடைந்தனர் மூவர் உயிரிழந்தனர். இச்செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் குறைந்த விலை ஸ்மார்ட் போன் மற்றும் ஜியோ போன்ற நிறுவனங்களின் இலவச இணைய திட்டங்களின் காரணமாக அனைத்து தரப்பினருக்கும் இணையப் பயன்பாடு என்பது எளிதானது. இப்போது சிறியவர் முதல் பெரியவர் வரை இணையம் என்பது பல்வேறு காரணங்களுக்காக முக்கிய பொருள் ஆகிவிட்டது.

டிஜிட்டல் இந்தியா போன்ற நம் அரசின் முயற்சிகள் பாராட்டத்தக்கதாக இருப்பினும் அவை மக்களிடம் அரசு மற்றும் இதர சேவைகளை இணையம் கொண்டு சேர்ப்பதில் மட்டுமே கவனமாக உள்ளது. மக்களிடம் சிறந்த இணையப்பயன்பாடு வழிமுறைகளை கொண்டு செல்ல தவறிவிட்டது. இப்போது, யார் வேண்டுமானாலும் எளிதாக இணையத்தை பயன்படுத்தலாம். பெரும்பாலானோர் பேசவும், சமூக வலைத்தளங்களை பயன்படுத்தவும் ஸ்மார்ட் போனை வாங்குகின்றனர். குறிப்பாக – Facebook, Youtube and Whatsapp.

இச்சமூக வலைத்தளங்கள், முன்பு போல் இல்லாமல் யார் வேண்டுமானாலும் ஒரு செய்தியையோ, காணொளியையோ, புகைப்படத்தையோ எளிதாக பதிவேற்றம் செய்து பிறரிடம் பகிரலாம். எனக்கு ஒரு வதந்தியை பரவவிட எளிமையான வழியல்லவா? அவ்வாறு ஒருவர் whatsapp மூலம் பரப்பிவிட்ட வதந்தியே அந்த “குழந்தை திருடர்கள்” காணொளி. நம்மில் பலர் அக்காணொளியின் உண்மை தன்மையை ஆராயாமல் பகிர்ந்ததின் விளைவு மூன்று உயிர்.

சமூக வலைத்தளங்களில் வதந்திகளை தடுக்கமுடியுமா ?

இணையம் என்பது ஒரு பொதுவுடைமை அதுவே அதன் தனித்தன்மையின் காரணம். ஒவ்வொருவருக்கும் தன் விருப்பத்திற்கு ஏற்ப இணையத்தை பயன்படுத்த உரிமையுண்டு – அதில் வதந்திகளும் அடங்கும். இதற்கு தீர்வுதான் என்ன ?

தீர்வு என்று ஒன்றை சொல்லமுடியாது.

ஓவ்வொருவரும், இணையத்தில் பகிரப்பட்ட செய்திகள், பதிவுகள், காணொளிகள் அனைத்தும் உண்மையாக இருக்கவேண்டியது இல்லை என்பதனை உணர்ந்து. பிறருக்கு ஒரு தகவலை சமூக வலைத்தளங்களில், பகிரும் முன் அதன் உண்மை தரத்தை ஆராய்ந்து செயல்பட்டாலே போதும் – இணையம் ஒரு முழுமையான மேம்பாட்டுத்தளமாகிவிடும்.

இதனை அடைய எங்கள் நிறுவனத்தின் முயற்சியாக கடந்த வருடம் பள்ளி மாணவர்களுக்கான “டிஜிட்டல் திறன்” வளர்க்கும் பயிற்சி வழங்கினோம். இனி வரும் வாரங்களில், Youtube -இல் பல்வேறு காணொளிகளை பதிவேற்றவுள்ளோம் அதன் மூலம் நீங்களும் உங்கள் இணைய மற்றும் சமூகவலைதள பயன்பாட்டை உங்கள் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தலாம்.

எனவே, எங்கள் F – infotech சேனலை Youtube – இல் இந்த link -இல் Subscribe செய்யவும்

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

நன்றி.

Please follow and like us:

2 thoughts on “சமூக வலைதளங்கள் மற்றும் இணையம் – வரமா ? சாபமா ?

  1. Senthilkumar Reply

    அருமையான பதிவு. We are welcome theses type of awarness from your end…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *